கொரடாச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய நிர்வாகி கவியரசன் படு கொலையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தஞ்சை மாவட்டம் , பாபநாசம் மெயின் சாலையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலர் பொறுப்பு உறவழகன் தலைமை வகித்தார். பாபநாசம் சட்ட மன்றத் தொகுதிச் செயலர் தமிழன் முன்னிலை வகித்தார். இதில் நிர்வாகிகள் விவேகானந்தம், யோகானந்தம், ஒளியவன், பாலா, வெற்றி வேந்தன், நெப்போலியன், தமிழ் வளவன், முருகேசன், வெண்மணி உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.