தெலங்கானா மாநிலம் ஐதராபாத் சந்தியா தியேட்டரில் புஷ்பா 2 படத்தின் பிரிமியம் காட்சி கடந்த 4ம் தேதி திரையிடப்பட்டது. அப்போது தியேட்டருக்கு நடிகர் அல்லு அர்ஜூன் வந்த நிலையில், ரசிகர்கள் கூட்டம் திரண்டது. இதில் கணவனுடன் வந்து கூட்ட நெரிசலில் சிக்கிய ரேவதி என்ற பெண் உயிரிழந்தார். அவரது 8 வயது மகன் ஸ்ரீதேஜ் படுகாயமடைந்து ஐதராபாத் கிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், ஸ்ரீதேஜின் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
தற்போது குழாய் மூலம் உணவு அளித்து வருகிறோம். சிறுவனின் உடல்நிலை குறித்து அவ்வப்போது மருத்துவர்கள் பரிசோதித்து வருகின்றனர்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே ஸ்ரீதேஜ் மூளைச்சாவு அடைந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஆனால், மருத்துவமனைக்கு வந்த அல்லு அர்ஜூனின் தந்தை அல்லு அரவிந்த் சிறுவனின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக நேற்று மாலை தெரிவித்தர். பெண் பலியான வழக்கில் கைதான அல்லு அர்ஜூன் ஐகோர்ட்டால் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் காயமடைந்த சிறுவனுக்கு மூளைச்சாவு ஏற்பட்டுள்ளது அவருக்கு புதிய நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.