கோவை சத்தியமங்கலம் சாலையில் உள்ள கிறிஸ்தவ பெந்தகோஸ்தே சபை பேராலயத்தில், கிறிஸ்து பிறப்பு திருவிழா நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.இதில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார்.
விழாவில் துணை முதல்வர் உதயநிதி பேசியதாவது:
உலகமே கொண்டாடும் விழாகிறிஸ்மஸ் விழா.அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். நான் படித்த பள்ளி டான்பாஸ்கோ, கல்லூரி படிப்பு லயோலா கல்லூரி . எனவே , நானும் ஒரு கிறிஸ்துவன் தான் என கூறிக்கொள்வதில் பெருமைப்படுகிறேன். இப்படி நான் பேசுவதால் பல சங்கிகளுக்கு கோபம் ஏற்படலாம்.
அனைத்து மதங்களும் அடிப்படையில் அன்பை தான் போதிக்கின்றன. நீங்கள் என்னை இந்து என்றால் நான் இந்து . என்னை கிறிஸ்தவன்
என்று நினைத்தால் கிறிஸ்தவன். இஸ்லாமியன் என்று நினைத்தால் இஸ்லாமியன். நான் அனைத்து மதத்திற்கும் சொந்தக்காரன் .
சிலர் மதத்தை வைத்து மட்டும் அரசியல் செய்கிறார்கள். சமூக வலைத்தளங்கள் உட்பட அனைத்து ஊடகங்களிலும், பொய்யை மட்டுமே அவர்கள் பரப்பி வருவகிறார்கள்.
சமீபத்தில் அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர், இஸ்லாமிய மக்களுக்கு எதிராக பேசி உள்ளார். இப்படி ஒரு நீதிபதி இருந்தால், அவரிடம் நியாயம் எப்படி கிடைக்கும் ?. மதரீதியான அவதூறு பேச்சு பேசிய நீதிபதியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என பாராளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்த போது, அதிமுக அதனை ஆதரிக்கவில்லை . இதன் மூலம்
அதிமுக- பாஜக கள்ளக் கூட்டணி இன்னும் தொடர்கிறது என்பது உறுதியாகிறது.
சமீபத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில், ஒரு தீர்மானம் கூட மத்திய பாஜக அரசை கண்டித்து இயற்றப்படவில்லை என்பதே இதற்கு சாட்சி .
திராவிட இயக்கம் இருக்கும் வரை, சிறுபான்மை மக்களுக்கு ஆதரவாக இருப்போம் .
கிறிஸ்தவ மக்கள் வைத்த கோரிக்கைகள், முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
வரும் 2026″ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலிலும், திமுக கூட்டணிக்கு உங்கள் ஆதரவை எப்போதும் போல தர வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.