Skip to content
Home » பணம் பறிப்பு…. மளிகை கடையில் ரூ 2.80 லட்சம் கொள்ளை.. திருச்சியில் துணிகரம்..

பணம் பறிப்பு…. மளிகை கடையில் ரூ 2.80 லட்சம் கொள்ளை.. திருச்சியில் துணிகரம்..

  • by Authour

கத்தி முனையில் வடமாநில வாலிபரிடம் பணம் பறிப்பு..

மேற்கு வங்காள மாநிலம் பெருசராய் பகுதியை சேர்ந்தவர் மகேஷ் பசுவான் (24 )இவர் திருவானைக்காவல் பகுதியில் உள்ள ஒரு மளிகை கடையில் வேலை பார்த்து வருகிறார் முகேஷ் பஸ்வான் திருவானைக்காவல் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அங்கு வந்த திருவானைக்காவல் வடக்கு தெருவை சேர்ந்த வரதராஜன் (வயது 20 )என்ற வாலிபர் கத்தியை காட்டி மிரட்டி முகேஷ் பஸ்வான் யிடமிருந்து ரூ.1000 பணத்தை பறித்துக் கொண்டு அங்கிருந்து ஓடி விட்டார் இது தொடர்பாக முகேஷ் பஸ்வான் ஸ்ரீரங்கம் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து திருவானைக்காவல் கீழே கொண்டையம்பேட்டை
பகுதியைச் சேர்ந்த வரதராஜன் என்ற வாலிபரை கைது செய்துள்ளனர்.

மளிகை கடை பூட்டை உடைத்து ரூ.2 80 லட்சம் பணம் கொள்ளை 

திருச்சி கே கே நகர் உஸ்மான் அலி தெருவை சேர்ந்தவர் அப்துல் சலாம் (வயது 34)இவர் எல்ஐசி காலனி பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார்.கடந்த 13 ந்தேதி கடையை பூட்டி விட்டு அப்துல் சலாம் வீட்டிற்கு சென்று விட்டார். பின்னர் காலையில் கடைக்கு சென்று பார்த்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பணபெட்டியில் இருந்த ரூ. 2 லட்சத்து 80 ஆயிரம் பணம் திருட்டுப் போய் இருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து அவர் கேகே நகர் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.பிறகு மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை செய்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது மளிகை கடை பூட்டை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் வியாபாரிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!