ஈரோடு கிழக்குத் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏவாக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன், கடந்த 14ம் தேதி காலமானார். இதையொட்டி அந்த தொகுதி காலியாக உள்ளதாக தமிழக சட்டப்பேரவை செயலகம் அறிவித்ததுடன், தமிழக தேர்தல் அதிகாரிக்கு தகவல் தெரிவித்தது. இந்த நிலையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, இந்திய தலைமை தேர்தல் ஆணையத்துக்கு இந்த தகவலை தெரிவித்து கடிதம் எழுதி உள்ளார். எனவே விரைவில் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு தேர்தல் நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.