இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான 3 வது டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள பிரிஸ்பேன் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்து445 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. அடுத்து ஆடிய இந்தியா 260 ரன்கள் எடுத்து இன்று காலை ஆட்டம் இழந்தது.
அதைத்தொடர்ந்து கடைசி நாளான இன்று காலை ஆஸ்திரேலியா 2வது இன்னிங்சை தொடங்கியது. 7 விக்கெட் இழப்புக்கு 89 ரன்கள் எடுத்த நிலையில் போட்டியை டிக்ளேர் செய்தது. இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து ஆஸ்திரேலியா, இந்தியாவை விட 274 ரன்கள் கூடுதலாக பெற்றுள்ளது.
54 ஓவர்களில் 275 ரன்கள் எடுத்தால் இந்தியா வெற்றி பெறலாம் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. காலை 9.55 மணி அளவில் இந்தியா பேட்டிங்கை தொடங்கியது. ஜெய்ஸ்வால், கே. எல். ராகுல் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர்.
இந்த போட்டியிலும், தொடர்ந்து வரும் அடுத்த 2 போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்றால் உலக டெஸ்ட் சாம்பியன் போட்டிக்கு இந்தியா தகுதி பெற்று விடும். அதை தடுத்து விடவேண்டும் என ஆஸ்திரேலியா முனைப்புடன் ஆடி வருகிறது. அதே நேரத்தில் இந்தியா இந்த போட்டியில் வெற்றி பெற வாய்ப்பு இல்லை என்ற நிலையில் டிரா செய்ய போராடுகிறது. இதற்கிடையே மழையும் மிரட்டிக்கொண்டு இருந்தது. 2.1 ஓவரில் இந்தியா 8 ரன்கள் எடுத்த நிலையில் மழை பெய்ததால் ஆட்டம் தடை பட்டது. பரபரப்பான நிலையில் போட்டி நடந்து வருகிறது.