Skip to content
Home » கொலை வழக்கு: மயிலாடுதுறை தந்தை, மகனுக்கு ஆயுள் சிறை

கொலை வழக்கு: மயிலாடுதுறை தந்தை, மகனுக்கு ஆயுள் சிறை

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு காவல் சரகத்துக்கு உள்பட்ட கிடாய்த்தலைமேடு சன்னதி வடக்கு தெருவை சேர்ந்தவர் செல்லம்மாள்(76). கருத்து வேறுபாடு காரணமாக கணவன் சுப்பிரமணியன்(87) என்பவரை பிரிந்து வாழ்ந்து வந்தார்.

இவர்களுக்கு 4 மகள், 2 மகன் உள்ள நிலையில், 2-வது மகன் ராமலிங்கம்(58) என்பவர் தந்தை சுப்பிரமணியனுடன் வசித்து வந்தார். இவர்களது சொத்தை பாகப்பிரிவினை செய்வது சம்பந்தமாக பிரச்னை ஏற்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது.  நிலத்தகராறு  தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது.
கடந்த  2016-ம் ஆண்டு மே மாதம் 8-ம் தேதி செல்லம்மாள் பால் வாங்குவதற்கு வீட்டுக்கு வெளியில் வந்தபோது, சுப்பிரமணியன் செல்லம்மாளை பிடித்துக்கொள்ள, அவரது மகன் ராமலிங்கம் கத்தியால் குத்தியதில் செல்லம்மாள் இறந்தார்.
இதுகுறித்து, மணல்மேடு  போலீஸார் வழக்குப்பதிவு செய்து  சுப்பிரமணியன் மற்றும் ராமலிங்கம் மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

செல்லம்மாளை கொலை செய்த அவரது கணவர் சுப்பிரமணியன் மற்றும் மகன் ராமலிங்கம் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.2,000 அபராதம் விதித்தும் அபராதம் கட்டத் தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனை விதித்து நீதிபதி விஜயகுமாரி உத்தரவிட்டார். இவ்வழக்கில் சிறப்பாக செயல்பட்ட அரசு வழக்கறிஞர் ராமசேயோன் மற்றும் போலீஸாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் பாராட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *