தமிழக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை..தென்மேற்கு வங்க்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, படிப்படியாக வலுவடைந்து, நேற்றைய நிலவரப்படி, தெற்கு வங்கக்கடலின் மையப்பகுதியில் நிலவியது. இது, அடுத்த இரண்டு நாட்களில் மேலும் வலுவடைந்து, மேற்கு, வடமேற்கு திசையில், தமிழகம் நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக, வடமாவட்டங்களில் அனேக இடங்கள், பிற மாவட்டங்களில் ஒரு சில இடங்களில், இன்று இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. டிச., 23 வரை மிதமான மழை தொடர வாய்ப்புஉள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இன்று, 12 முதல், 20 செ.மீ., வரை மிக கனமழை பெய்ய வாய்ப்புஉள்ளது. இதற்கான, ‘ஆரஞ்ச் அலெர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது. விழுப்புரம், கடலுார் மாவட்டங்களில், ஒரு சில இடங்கள் மற்றும் புதுச்சேரியில், 12 செ.மீ., வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.