Skip to content
Home » அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஜாமீனுக்கு எதிராக தொடரப்பட்ட மனு .. உச்சநீதிமன்றம் தள்ளுபடி ..

அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஜாமீனுக்கு எதிராக தொடரப்பட்ட மனு .. உச்சநீதிமன்றம் தள்ளுபடி ..

  • by Authour

சட்ட விரோத பணப் பரிமாற்றம் நடைபெற்றதாக கூறி அமைச்சர் செந்தில்பாலாஜி மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டிருந்த நிலையில் அமலாக்கத்துறையும் தனியாக வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ம் தேதி கைது செய்யப்பட்டார். ஓராண்டுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டு இருந்த செந்தில் பாலாஜிக்கு கடந்த செப்டம்பர் மாதம் சுப்ரீம்கோர்ட்டு ஜாமீன் வழங்கியது. சிறையில் அடைக்கப்பட்ட சில மாதங்கள் கழித்து தனது அமைச்சர் பதவியை செந்தில் பாலாஜி ராஜினாமா செய்த நிலையில், ஜாமீனில் வெளி வந்த பிறகு மீண்டும் மின் துறை அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார். இதற்கிடையே, செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கும் போது அனைத்து அம்சங்களையும் கருத்தில் கொள்ளவில்லை என்றும், இதனால், ஜாமீன் தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும் எனக்கூறி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் அபய் எஸ்.ஒகா, ஏ.ஜி.மாசி ஆகியோர் அடங்கிய அமர்வு, நீதிபதிகள் அறையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறுகையில் , ” “செந்தில்பாலாஜிக்கு ஜாமீன் வழங்கி கடந்த செப்டம்பர் மாதம் 26-ந்தேதி கூறிய தீர்ப்பில் எந்தவித தவறும் இல்லை என்பதால் மறுஆய்வு செய்ய முகாந்திரம் இல்லை” எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *