அரியலூர் மாவட்டம், மாவட்ட விளையாட்டு அரங்கில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், அரியலூர் சார்பில் தமிழ்நாடு சிறப்பு ஒலிம்பிக் பாரத் 2027 போட்டிகளில் பங்கேற்பாளர்களை தேர்வு செய்யும் விதமாக மாற்றுத்திறன் மாணவ, மாணவியர்களுக்கு மாவட்ட அளவில் திறன் பரிசோதனைகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகளை இன்று (17.12.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
சிறப்பு ஒலிம்பிக் போட்டி 2027 மாநில அளவில் நடைபெற இருக்கும் விளையாட்டுப் போட்டிகளில், அரியலூர் மாவட்ட அளவில் பங்கேற்பாளர்கள் தேர்வு செய்யும் விழா மாவட்ட ஆட்சித்தலைவர் இரத்தினசாமியால் துவக்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில், 500 மீட்டர்
ஓட்டப்பந்தயம், 100 மீட்டர் ஓட்டப்பந்தயம், 400 மீட்டர் தொடர் ஓட்டம், நின்று நீளம் தாண்டுதல், ஓடி நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் ஆகிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது.
இப்போட்டிகளில் 200-க்கும் மேற்பட்ட அறிவுசார் குறைபாடுடைய 14 முதல் 19 வயது வரையுள்ள மாற்றுத்திறன் மாணவ, மாணவியர்கள் கலந்துகொண்டனர். இப்போட்டிகளில் கலந்துகொண்ட மாற்றுத்திறன் மாணவ, மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் இரத்தினசாமி வாழ்த்துகளை தெரிவித்து, போட்டிகளை துவக்கி வைத்தார்.
இந்நிகழ்வில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மஞ்சுளா, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் லெனின், READ தொண்டு நிறுவன நிர்வாக இயக்குநர் டாக்டர்.செல்வம், குடந்தை சேவா சங்க நிர்வாக இயக்குநர் சதீஸ்குமார், ஓசை தொண்டு நிறுவன ஒங்கிணைப்பாளர் செல்வி.பிரிஜிட் ஜெனிட்டா, அம்மா தொண்டு நிறுவன நிர்வாக இயக்குநர் விமலாதேவி, சிறப்பு ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாற்றுத்திறன் மாணவ, மாணவியர்கள் கலந்துகொண்டனர்.