யூ டியூபர் சவுக்கு சங்கர் சில மாதங்களுக்கு முன் தேனியில் தங்கியிருந்தபோது அவரிடம் இருந்து போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இந்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கில் கோர்ட்டில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. எனவே அவருக்கு கோர்ட் பிடிவாரண்ட் பிறப்பித்தது. அதன்படி இன்று சென்னையில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார். அவரை தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரித்து வருகிறார்கள்.