அரியலூர் மாவட்டம் ஆனந்தவாடி கிராமத்தில், மது போதையில் அடிக்கடி தகராறில் ஈடுபட்ட கணவனை, கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அரியலூர் மாவட்டம் ஆனந்தவாடி கிராமத்தை சேர்ந்தவர் சின்னப்பா (45). இவருக்கு மனைவி பழனியம்மாள் ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.
இந்நிலையில் சின்னப்பா பெயரில் இருந்த ஒரு ஏக்கர் நிலத்தை, அவரது மகன் பாலமுருகன் பெயருக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு எழுதி கொடுத்துள்ளனர். அந்த நாள் முதல் தற்போது வரை, தினமும் மது போதையில் மனைவியிடம், என்னை ஏமாற்றி என் நிலத்தை எழுதி வாங்கி கொண்டாய் என சின்னப்பா பிரச்சனையில் ஈடுபட்டு வந்துள்ளார். நேற்று இரவும் சின்னப்பா
மனைவி மற்றும் மகளை அடித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மனைவி பழனியம்மாள் கத்தியால், சின்னப்பா தலையில் தாக்கியும், இரண்டு கால் மற்றும் கை நரம்பை துண்டித்தும், கொலை செய்துள்ளார். தகவல் அறிந்த இரும்புலிகுறிச்சி போலீசார், மனைவி பழனியம்மாளை கைது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.