எம்எல்ஏ அலுவலக ஊழியர் வீட்டில் பணம் பொருட்கள் கொள்ளை
ஸ்ரீரங்கம் , மேலூர் ரோடு லட்சுமி நாராயணன் நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் ராகுல் (வயது 30 )இவர் திருவரங்கம் எம்.எல்.ஏ அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு தந்தை வீட்டுக்கு சென்று விட்டார் .பின்னர் வந்து பார்த்தபோது மர்ம நபர்களால் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது .உள்ளே சென்று பார்த்தபோது வீட்டிலிருந்த 5ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் வெள்ளி பொருட்கள் திருடு போயிருந்தது. இது குறித்து ராகுல் ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சுப்பன் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். ஸ்ரீரங்கம் எம்எல்ஏ அலுவலக ஊழியர் வீட்டில் கொள்ளை போன சம்பவம் திருவரங்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வேன் டிரைவர் திடீர் மாயம்…
திண்டுக்கல் மாவட்டம் சேடப்பட்டி நல்லமுத்து பிள்ளை தெருவை சேர்ந்தவர் பெரியண்ணன் பிள்ளை. இவரது மகன் பாண்டியன் (வயது 59 ) திருச்சி காந்தி மார்க்கெட்டில் உள்ள பழக்கடையில் பணிபுரிந்து வருகிறார். இங்கு இவரது மகன் நாகராஜ் (வயது 39) என்பவர் டிரைவராக உள்ளார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று சேடப்பட்டியில் உள்ள கடைக்கு பழங்களை இறக்குவதற்காக நாகராஜ் சென்றுவிட்டார். பின்னர் திருச்சி காந்தி மார்க்கெட்டிற்கு திரும்பவில்லை. இது குறித்து பாண்டியன் காந்தி மார்க்கெட் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து மாயமான நாகராஜை தேடி வருகின்றனர்.
வெளி மாநில லாட்டரி விற்ற வாலிபர் கைது….
திருச்சி உறையூர் பகுதியில் வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து எஸ்ஐ வெங்கடேஷ் தலைமையிலான போலீசார் ரோந்து சென்று தீவிரமாக கண்காணித்தனர். இந்நிலையில் உறையூர் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்றதாக உறையூர் சுரேந்திரன் (28) என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து பணம் மற்றும் லாட்டரி சீட்டுகள் விற்றதற்கான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் தப்பி ஓடிய உறையூர் தியாகராஜ நகரை சேர்ந்த மகேந்திரன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.