இந்தியா, ஆஸ்திரேலியா இடையேயான 3வது கிரிக்கெட் டெஸ்ட் பிரிஸ்பேனில் நடந்து வருகிறது. ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்தது. முதல்நாள்28 ரன்கள் எடுத்த நிலையில் பலத்த மழை பெய்ததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. 2ம் நாள் மீண்டும் ஆட்டம் தொடங்கியது. ஆஸ்திரேலியா தொடர்ந்து ஆடி 7 விக்கெட் இழப்புக்கு 405 ரன்கள் சேர்த்தது. 3வது நாள் ஆட்டத்தில் தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா 445 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.
அதைத் தொடர்ந்து இந்தியா பேட்டிங் தொடங்கியது. அவ்வப்போது மழை வந்து குறுக்கிட்டது. இந்தியாவின் மோசமான ஆட்டத்தால் நேற்று 51 ரன் சோ்ப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இந்தியா இழந்தது.
4ம் நாள் ஆட்டம் இன்று காலை தொடங்கியது. இந்தியா தொடர்ந்து ஆடியது. இன்றும் அவ்வப்போது மழை குறுக்கிட்டது. இறுதியில் இந்தியா 9 விக்கெட்டுகளை இழந்து 252 ரன்கள் சேர்த்தது. கே. எல். ராகுல் 84, ஜடேஜா 77 ரன்கள் சேர்த்து இந்தியாவின் கவுரவத்தை காப்பாற்றினர். இதன் மூலம் இந்தியா பாலோ ஆனை தவிர்த்தது.
தற்போது ஆகாஷ்தீப் 27, பும்ரா 10 ரன்களுடன் களத்தில் உள்ளனர். ஆட்டம் முடியும் தருவாயில் போதிய வெளிச்சம் இல்லாததால் ஆட்டம் நிறுத்திக்கொள்ளப்பட்டது. நாளை இறுதி நாள் போட்டி நடைபெறும். இன்னும் முதல் இன்னிங்ஸ் முடியாத நிலையில் இரு அணிகளும் 2வது இன்னிங்ஸ் ஆட வேண்டி உள்ளதால் மழையின் கருணையில் இந்தியா டிரா செய்யும் வாய்ப்பு உள்ளது.