நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளை பேச அனுமதிக்காத மத்திய அரசை கண்டித்து நாளை இந்தியா முழுவதும் கவர்னர் மாளிகை முற்றுகை போராட்டத்தை காங்கிரஸ் கட்சி நடத்துகிறது. சென்னையில் நாளை காலை 10 மணிக்கு சைதாப்பேட்டையில் இந்த போராட்டம் நடைபெறும் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்து உள்ளார்.