ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏவாக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் கடந்த 14ம் தேதி காலமானார். இதையடுத்து அந்த தொகுதி காலியானதாக இன்று தமிழ்நாடு சட்டப்பேரவை செயலகம் அறிவித்து உள்ளது. தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரிக்கும் இது தொடர்பாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனவே வரும் ஜனவரி மாத இறுதியிலோ அல்லது பிப்ரவரியிலோ ஈரோடு கிழக்கு தொகுதிக்கு மீண்டும் இடைத் தேர்தல் நடத்த வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.