Skip to content
Home » சிறுமிக்கு பாலியல் தொல்லை…. வாலிபருக்கு 5 ஆண்டு சிறை….. திருச்சி கோர்ட் தீர்ப்பு….

சிறுமிக்கு பாலியல் தொல்லை…. வாலிபருக்கு 5 ஆண்டு சிறை….. திருச்சி கோர்ட் தீர்ப்பு….

  • by Authour

திருச்சி மாவட்டம் குணசீலத்தை சேர்ந்தவர் பிரசன்னா (24). இவர் கடந்த 2.12.2020 அன்று 7 வயது சிறுமியை அழைத்து வந்து, தன் வீட்டு கொல்லைப்புறத்தில் வைத்து பாலியல் ரீதியிலாக துன்புறுத்தியுள்ளார். இதில் மிரண்டுபோன சிறுமி தனது தாயாரிடம் விவரம் கூறியுள்ளார். அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், சம்பவம் குறித்து, ஜீயபுரம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீஸர், பிரசன்னா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
இவ்வழக்கு திருச்சி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கின் வாத, பிரதிவாதங்கள் நிறைவுற்ற நிலையில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதில், பிரசன்னாவுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5,000 அபராதமும், கட்டத்தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனையும் விதித்து, நீதிபதி ஸ்ரீவத்சன் உத்தரவிட்டார். அரசு தரப்பில் கூடுதல் அரசு உதவி வழக்குரைஞர் சுமதி ஆஜரானார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *