கோவை, ஆலாந்துறை அடுத்த ஹை ஸ்கூல் புதூரில் உள்ள ஸ்ரீ ஹரி என்ற இருசக்கர ஒர்க் ஷாப் நிலையம் உள்ளது. இங்கு இன்று காலை போளுவாம்பட்டி பகுதியைச் சேர்ந்த விவசாய கூலித் தொழிலாளி முனிராஜ் என்பவரின் எக்ஸ் எல் சூப்பர் இருசக்கர வாகனம் ஸ்டார்ட் ஆகாததால் அந்த வாகனத்தை அருகில் உள்ள ஸ்ரீ ஹரி என்ற இருசக்கர ஒர்க் ஷாப்பில் பழுது நீக்க கூறினார் நிறுத்தி உள்ளார். அந்த வாகனத்தை பழுது பார்த்து ஸ்டார்ட் செய்து உள்ளார் அந்தக் கடையின் மெக்கானிக். அந்த வாகன அதிர்வின் போது டேங்க் கவரில் பதுங்கு
இருந்த குட்டிப் பாம்பு கொம்பேறி மூக்கன் நெளிந்த படி தலையை வெளியே நீட்டி எட்டிப் பார்த்தது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஒர்க் ஷாப் ஊழியர் அருகில் இருந்த பொதுமக்களின் உதவியுடன் அந்தப் பாம்பை லாவகமாக பிடித்து அருகே உள்ள வனப் பகுதியில் விடுவித்தனர். இருசக்கர வாகனத்தில் இருந்த குட்டி பாம்பு கொம்பேறி மூக்கனை கண்டு அதிர்ச்சி அடைந்ததால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது