கரூர் மாவட்டம், நெரூர் பகுதியைச் சேர்ந்த சேது (24) இவருடைய இளைய சகோதரர் ஸ்ரீதர் (23) இருவரும் கரூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எட் படித்து வருகின்றனர். இன்று நெரூர் பகுதியில் இருந்து வாங்கல் நோக்கி சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த லாரியும் இருசக்கர வாகனம் எதிர்பாராத விதமாக மோதியது. இந்த விபத்தில் கல்லூரி மாணவன் சேது சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலும், படுகாயம் அடைந்த ஸ்ரீதரன் என்பவரை அருகில் இருந்த பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி
மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து வாங்கல் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கரூர் அருகே கல்லூரி மாணவன் விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.