திருச்சி, திருவெறும்பூர் ஐ.ஏ.எஸ் நகரில் தேவேந்திரன் என்பவரது வீட்டில் கடந்த 23ம் தேதி 150க்கும் அதிகமான சவர நகைகள் லேப்டாப் மற்றும் பல பொருட்கள் திருடு போனது. இது தொடர்பாக திருவெறும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது, குற்றவாளிகளை கைது செய்ய திருச்சி சரக டிஐஜி சரவண சுந்தர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு தொடர்ந்து குற்றவாளிகளை கைது செய்ய தேடுதல் வேட்டையில் காவல்துறையில் ஈடுபட்டு வந்த நிலையில் இன்று காலை மஞ்ச திடல் அருகே ஸ்கார்பியோ வாகனம் ஒன்று சந்தேகத்திற்கு இடமாக நிற்காமல் சென்றதை பின் தொடர்ந்து காவல்துறையினர் சோதனை செய்தபோது செல்வ கார்த்திக் என்கிற இளைஞர்
காலில் 22 பவுன் நகை மற்றும் 50 ஆயிரம் ரூபாய் நகையை வைத்திருந்தது தெரிய வந்தது – இதில் தொடர்ந்து விசாரணை செய்ததில் திருவையாறில் உள்ள புது அக்ரஹாரத்தில் தனது வீட்டில் மறைத்து வைத்திருந்த 96 பவுன் தங்க நகை 47 லட்சத்து 20 ஆயிரம் பணம் இருந்தது கைப்பற்றப்பட்டு அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
செல்வ கார்த்திகேயனிடம் இருந்து 108 பவுன் தங்க நகைகள் – 5 லட்ச ரூபாய் மதிப்பு உள்ள வைர நகைகள் 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பிளாட்டினம் நகைகள் – ஒரு லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளி நகைகள் ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள லேப்டாப் 50 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.