கோவை உக்கடம் அன்பு நகர் பகுதியில் குப்பை கிடங்கு செயல்பட்டு வருகிறது அங்கு தொடர்ந்து மருத்துவக் கழிவுகள் ஆட்டோவில் வந்து கொட்டுவதால் அப்பகுதி மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் கோவை உக்கடம் பகுதியில் டெங்கு காய்ச்சலால் ஒருவர் மரணம் அடைந்துள்ளார் இன்னொருவர் சிகிச்சையில் உள்ளார். இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்து மருத்துவ
கழிவு கொட்ட வந்த வாகனத்தை பறிமுதல் செய்து மறியலில் ஈடுபட முயற்சித்தனர். தகவல் அறிந்த உக்கடம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜ்குமார் தலைமையில் போலீசார் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி நாளைக்கு ஒரு தீர்வு காண்போம் என்பதனால் அப்பகுதி மக்கள் கலைந்து சென்றனர்