தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் மாநில பொதுக்குழு கூட்டம் மாநில தலைவர் ‘ A.M.விக்கிரமராஜா தலைமையில் 17.1224 செவ்வாய்கிழமை காலை 8.55 மணியளவில் திருச்சி பழைய பால்பண்ணை அருகில் உள்ள ஹோட்டல் ஸ்ரீ சங்கீதாஸ், சக்ரா ஹாலில் நடைபெற இருக்கிறது. மதியம் வரை பொதுக்குழு கூட்டம் நடைபெறும்.
இதில் மாநில பொதுச்செயலாளர், மாநில பொருளாளர், மாநில கூடுதல் செயலாளர்கள், மண்டல தலைவர்கள், அனைத்து மாவட்டங்களின் தலைவர்கள். செயலாளர், பொருளாளர் மற்றும் இளைஞர் அணி நிர்வாகிகள் உட்பட சுமார் 1000க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.
இப் பொதுக்குழு கூட்டத்தில் வணிகர்கள் தற்போது சந்தித்து வரும் பல்வேறு சிக்கல்கள் குறித்தும், அதிகாரிகளின் அத்துமீறல்கள் குறித்தும், GSTயில் நிலவி வரும் பல்வேறு குழப்பங்கள் குறித்தும், மத்திய அரசு அறிவித்துள்ள வாடகைக்கு 18% GSTக்கு எதிரான அடுத்த கட்ட போராட்டங்கள் குறித்தும் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.
பொதுக்குழு தீர்மானங்கள் குறித்து தலைவர் விக்கிரமராஜா, மதியம் 1.30 மணிக்கு பத்திரிகையாளர்களிடம் விளக்குகிறார். இந்த தகவலை வணிகர் சங்க பேரமைப்பின் மாநில பொதுச்செயலாளர் வி.கோவிந்தராஜூலு தெரிவித்துள்ளார்.