இலங்கை அதிபர் தேர்தல் கடந்த செப்டம்பர் மாதம் நடந்தது. இதில் அநுர குமார திசநாயக அதிபராக வெற்றி வெற்றி பெற்றார். அவர் , முதல் வெளிநாட்டு பயணமாக முதல்முறையாக இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார். மூன்று நாள் பயணமாக டில்லி வந்துள்ள அநுர குமார திசநாயக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்து பேசினார். இன்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.