2025 உலக தடகள போட்டி இந்தியாவில் நடைபெறவுள்ளது என்று இந்திய தடகள சம்மேளனம் (ஏஎஃப்ஐ) அறிவித்துள்ளது.
இது தொடர்பாக ஏஎஃப்ஐ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: உலக தடகள போட்டியானது ஒடிசா மாநிலத் தலைநகர் புவனேஸ்வரில் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 10-ம் தேதி நடைபெறும். உலகத் தடகளப் போட்டியாக இது இருந்தாலும் இந்தியாவில் நடைபெறும் பிரிவானது வெண்கலப் பதக்கங்களுக்கான போட்டியாக மட்டுமே இருக்கும். இந்தியாவில் உலகத் தடகளப் போட்டியானது 1980-களின் இறுதியிலும், 1990-களின் தொடக்கத்திலும் இதற்கு முன்பு நடைபெற்றது. பல ஆண்டுகளுக்குப் பிறகு உலகத் தடகளப் போட்டியின் ஒரு பிரிவு இந்தியாவில் நடைபெறவுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.