இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு கடந்த மாதம் ரூ.20,395 கோடிக்கு செல்போன்கள் ஏற்றுமதியாகியுள்ளன. ஒரு மாதத்தில் ரூ.20,000 கோடிக்கு மேல் செல்போன்கள் ஏற்றுமதி செய்வது இதுவே முதல்முறை. அதிகபட்சமாக ஐபோன்களும் அதற்கு அடுத்தபடியாக சாம்சங் ஸ்மார்ட் போன்களும் ஏற்றுமதியாகியுள்ளன. கடந்த ஆண்டு நவம்பருடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு நவம்பரில் செல்போன் ஏற்றுமதி 92 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பரில் இந்தியாவில் இருந்து ரூ.10,634 கோடிக்கு மட்டுமே செல்போன்கள் ஏற்றுமதியாகின.