மூச்சு திணறி பெண் சாவு
திருச்சி இபி ரோடு கருவாட்டுப்பேட்டை காமராஜர் தெருவை சேர்ந்தவர் மதிமாறன் இவரது மனைவி மாதவி (வயது 38. )இவர் உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று அவருக்கு திடீரென்று மூச்சு திணறல் ஏற்பட்டது.
இதையடுத்து ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்து பார்த்த டாக்டர் ஏற்கெனவே மாதவி இறந்து விட்டதாக கூறினார்.இந்த சம்பவம் குறித்து கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
லாட்டரி சீட்டு விற்ற 3 பேர் கைது
திருச்சி கருமண்டபம் மாந்தோப்பு பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை செய்யப்பட்டு வருவதாக கண்டோன்மென்ட் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து
சப் இன்ஸ்பெக்டர் மதியழகன் தலைமையில் போலீசார் அங்கு சென்று பார்த்தபோது இரண்டு பேர் வெளி மாநில லாட்டரி சீட்டுகளை விற்றுக் கொண்டிருந்தனர்.இதையடுத்து போலீசார் அவர்கள் இரண்டு பேரையும் பிடித்து விசாரணை செய்த போது கருமண்டபம் பகுதியை சேர்ந்த கிருஷ்ணகுமார் (47)தினேஷ் குமார் என்பது தெரியவந்தது இதையடுத்து கண்டோன்மென்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து இரண்டு பேரையும் கைது செய்தனர்.
இதே போன்று கருமண்டபம் மாரியம்மன் கோவில் அருகில் வெளி மாநில லாட்டரி சீட்டு விற்ற கருமண்டபம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (வயது 35) என்பவரை போலீசார் கைது செய்தனர்.அவர்களிடமிருந்து வெளி மாநில லாட்டரி நம்பர் பேப்பர், பணத்தை பறிமுதல் செய்தனர்.
கடன் பிரச்சனையால் வாலிபர் மாயம்
திருச்சி பாலக்கரை சங்கிலியாண்டபுரம் பாரதியார் தெருவை சேர்ந்தவர் அக்பர் அலி. இவரது மகன் ரியாஸ் அலி (வயது 36)இவர் பங்கு சந்தையில் பணிபுரிந்து வந்தார்.இந்த நிலையில் இவர் கடன் வாங்கி பங்கு சந்தையில் முதலீடு செய்ததாக தெரிகிறது.இதையடுத்து பங்கு சந்தையில் நஷ்டம் ஏற்பட்ட காரணத்தால் கடன் கொடுத்தவர்கள் திருப்பிக் கேட்க ஆரம்பித்தனர்.இந்த நிலையில் ரியாஸ் அலி வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இது தொடர்பாக அவரது மனைவி ரேஷ்மி பாலக்கரை போலீசில் புகார் கொடுத்தார்.புகார் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ரியாஸ் அலியை தேடி வருகின்றனர்.