தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி இன்று தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு… கழகத் தலைவர், திராவிட நாயகர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி M. K. Stalin அவர்களின் நல்லாசிகளுடன், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர், இளம் தலைவர் Udhayanidhi Stalin அவர்களின் ஆசிகளுடன், கரூர் மாவட்டத்தில் உள்ள 3,40,488 குடும்ப அட்டைதாரர்களின் இல்லங்களுக்கும், தினசரி நாட்காட்டிகள் வழங்கும் பணியை இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் அமைச்சர் செந்தில்பாலாஜி தரப்பு காலண்டர் பணியினை திமுகவினர் ஆரம்பித்துள்ளனர். சுமார் 3, 40, 488 வீடுகளுக்கும் அடுத்த 2 நாட்களில் காலண்டர்கள் வழங்கப்பட்டு விடும் என நிர்வாகிகள் கூறுகின்றனர்.