Skip to content
Home » கனமழை எதிரொலி.. ஸ்ரீவைகுண்டம் கிளைச் சிறை கைதிகள் இடமாற்றம்

கனமழை எதிரொலி.. ஸ்ரீவைகுண்டம் கிளைச் சிறை கைதிகள் இடமாற்றம்

  • by Authour

தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது. தொடர்ந்து பெய்து வரும் மழையினால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஸ்ரீவைகுண்டம் அணையைத் தாண்டி 60 ஆயிரம் கன அடி தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது. கடந்த ஆண்டை போல் மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக வானிலை ஆராய்ச்சி மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. இந்த நிலையில் ஸ்ரீவைகுண்டம் பழைய தாசில்தார் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட கிளை சிறைச்சாலையில் இருந்து மழை வெள்ள பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெள்ளிக்கிழமை இரவு 25 கைதிகள் தூத்துக்குடி பேரூரணி மாவட்ட சிறைச்சாலைக்கு ஆயுதப்படை ஆய்வாளர் துணை முருகன் தலைமையில் பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!