தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின்படி, இந்த வருடத்தின் நான்காவது மற்றும் இறுதி தேசிய மக்கள் நீதிமன்றத்தின் கரூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், தேசிய மக்கள் நீதிமன்றம், மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி சண்முகசுந்தரம் தலைமையில் நடந்தது. இதில் கரூர் மாவட்டத்தில் கரூர்,குளித்தலை அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் உட்பட மொத்தம் 8 அமர்வு மூலம் மொத்தம் 1,564 வழக்குகள் சமரச தீர்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இதில் முன் அமர்வு நடத்தப்பட்டு அதில் ஒரு கோடியே 38
லட்சத்து 64 ஆயிரத்து 14 வழக்குகள் தீர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் வங்கிகள் வழக்குகள் சம்பந்தப்பட்ட சுமார் 400 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டு அதில் 124 வழக்குகள் சமரசம் ஏற்பட்டு 95 லட்சத்து60 ஆயிரத்து 361 ரூபாய் மதிப்புள்ள வழக்குகள் தீர்வாகியுள்ளது. என மாவட்ட முதன்மை நீதிபதி சண்முகசுந்தரம் தெரிவித்தார்.