மக்களவையில் இன்று மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். அடுத்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முந்தைய கடைசி முழு பட்ஜெட் என்பதால் சலுகைகள் பற்றிய அறிவிப்பு எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தநிலையில், டில்லியில் ஜனாதிபதி திரவுபதி முர்முவுடன் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் சந்தித்து பேசினார். இன்று பட்ஜெட் தாக்கலாகும் நிலையில் நிதித்துறையின் முக்கிய அதிகாரிகளும் ஜனாதிபதியுடன் சந்தித்தனர். அதைத்தொடர்ந்து பிரதமர் தலைமையிலான கூட்டத்தில் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் பெறுகிறார் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன். பட்ஜெட் தாக்கலுக்கு முன் ஜனாதிபதியை சந்திப்பது நடைமுறை ஆகும்.