கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே வெஞ்சமாங்கூடலூர் பகுதியில் உள்ள குடகணாறு திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து துவங்கி அரவக்குறிச்சி அருகே அமராவதி ஆற்றில் கலைக்கிறது. அணையில் இருந்து 4,000 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பாக வெஞ்சமாங்கூடலூர் பகுதியில் இருந்து அரவக்குறிச்சி செல்லும் சாலையில் குடகணாறில் குறுக்கே உள்ள தரை பாலம் கட்டப்பட்டு பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் அணையிலிருந்து திறந்து விடப்பட்ட நீர்
அதிகளவில் செல்வதால் தரைப் பாலத்தை மூழ்கடித்து வெள்ளநீர் செல்வதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
இதனால் பாரப்பட்டி, நந்தனூர், வரிக்காப்பட்டி, புதூர் , புங்கம்பாடி, மாலப்பட்டி உள்ளிட்ட 30 மேற்பட்ட கிராமத்திற்கு செல்லும் பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். இந்நிலையில் மழை நீரில் வடமாநில இளைஞர்கள் வீச்சு வளையல் கொண்டு மீன்களை ஆர்வத்துடன் பிடித்து வருகின்றனர். ஒரு சில நபர்கள் தரைப் பாலத்தில் நடந்தவாறு, சைக்கிளை தூக்கிக்கொண்டும் கடந்து செல்கின்றனர்.
பள்ளி,கல்லூரி மற்றும் விவசாய தேவைகளுக்கு பாலத்தில் செல்வதால் தரை பாலத்தை உயர்மட்ட பாலமாக கட்டித் தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.