Skip to content
Home » கார்த்திகை திருவிழா.. அண்ணாமலையார் மலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது..

கார்த்திகை திருவிழா.. அண்ணாமலையார் மலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது..

  • by Authour

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 4-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலையில் விநாயகர், சந்திரசேகரர் வீதி உலாவும், இரவில் பஞ்சமூர்த்திகள் வீதி உலாவும் நடைபெற்றது. திருவிழாவின் சிகர விழாவான மகா தீபத் திருவிழா இன்று நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீப தரிசனம் கண்டனர். இன்று மாலையில் கோவிலுக்கு பின்புறம் உள்ள 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றும் நிகழ்வுகள் தொடங்கின. மகா தீபத்திற்கு பயன்படுத்தப்படும் தீப கொப்பரை ஏற்கனவே பூஜை செய்யப்பட்டு, பக்தர்களால் மலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அத்துடன் மகா தீபம் ஏற்ற பயன்படுத்தப்படும் 4,500 லிட்டர் நெய், 1500 மீட்டர் நீள காடா துணியும் மலைக்கு எடுத்து செல்லப்பட்டது. காடா துணியில் நெய் ஊற்றி அதை திரியாக்கி தீப கொப்பரையில் வைக்கப்பட்டு மகா தீபம் தயாரானது. இது ஒருபுறமிருக்க, கோவிலின் தங்க கொடிமரம் முன்புள்ள தீப தரிசன மண்டபத்தில் விநாயகர், முருகர், அண்ணாமலையார், பராசக்தி அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர் (உற்சவர்கள்) ஆகியோர் எழுந்தருளினர். மாலை ௬ மணிக்கு அண்ணாமலையார், அர்த்தநாரீஸ்வரராக காட்சியளித்தார். அதன்பின்னர் தங்க கொடிமரம் முன்புள்ள அகண்டத்தில் தீபச் சுடர் ஏற்றப்பட்டதும், மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து, கோவிலில் உள்ள கோபுரங்கள் உட்பட திருவண்ணாமலை மாநகரம் முழுவதும் அகல் விளக்கேற்றி பக்தர்கள் வழிபடுகின்றனர். மோட்ச தீபம் எனப்படும் மகாதீபத்தை 11 நாட்களுக்கு பக்தர்கள் த

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *