Skip to content
Home » மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் வெள்ளம்…

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் வெள்ளம்…

மதுரை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக விட்டு விட்டு மழை பெய்து வந்த நிலையில் 2 மணி நேரத்திற்கு மேலாக கனமழையானது பெய்தது, இன்று காலை 6 மணி வரையில் 24 மணி நேரத்தில் மதுரை மாவட்டம் முழுமையாக 99 செ.மீ மழை பதிவாகியுள்ளது, மதுரை மாநகர பகுதிகளில் கனமழை பெய்த நிலையில் மதுரை மீனாட்சியம்மன் கோவிலை சுற்றி சித்திரை வீதிகளில் 2 அடி உயரத்திற்கு மழைநீரானது தேங்கியது, மேற்கு சித்திரை வீதி, வடக்கு சித்திரை வீதி உள்ளிட்ட சித்திரை வீதிகளில் 2 அடி உயரத்திற்கு மழைநீர் தேங்கியது.மேலும் மேற்கு மற்றும் வட கோபுரங்கள் வழியாக மழை நீர் கோயிலுக்குள்ளும் சென்றது. இதனால் சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் பாதிப்புக்கு உள்ளாகினார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *