திருச்சி மாவட்டத்தில் நேற்று துவங்கி தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை நீர் புகுந்துள்ளது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பெல் போலீஸ் ஸ்டேஷனிற்குள் மழை நீர் இன்று புகுந்தது. இதனால் போலீசார் கூட ஸ்டேஷனுக்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டிருந்தது. பெல் போலீஸ் ஸ்டேஷன் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிகுட்பட்டதாகவும், இத்தொகுதியின் எம்எல்ஏ தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஸ் பொய்யாமொழி. பெல் போலீஸ் ஸ்டேஷன் நிலை குறித்து நாகையில் முகாமிட்டுள்ள அமைச்சர் மகேஸ்க்கு தெரிவிக்கப்பட்டது. அவர் உடனடியாக மழைநீரை அகற்ற துவாக்குடி நகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதனையடுத்து துவாக்குடி நகராட்சி தலைவர் காயாம்பு மற்றும் அதிகாரிகள் பெல் போலீஸ் ஸ்டேஷனை சுற்றி இருந்த மழைநீரை அகற்றும் பணியினை மேற்கொண்டனர்..