கன்னட நடிகர் தர்ஷனின் காதலி பவித்ரா கவுடாவை ரேணுகாசாமி என்ற ரசிகர் சமூக வலைதளத்தில் டார்ச்சர் செய்து வந்தார். எனவே அவரை அழைத்து கொலை செய்து வீசினார் நடிகர் தர்ஷன். இது தொடர்பாக கர்நாடகபோலீசார் வழக்குப்பதிவு செய்து தர்ஷன், அவரது காதலி பவித்ரா கவுடா உள்பட 11 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தற்போது தர்ஷன், பவித்ரா உள்பட 7 பேருக்கு ஜாமீன் வழங்கி கர்நாடக ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.