பள்ளி புத்தாக்க மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ஸ்மார்ட்புல்டோசர்
கருவியினை கண்டுபிடித்து மாநில அளவில் 3ம் இடம் பிடித்த புதுக்கோட்டை
அரசுமேல்நிலைப்பள்ளியைச்சேர்ந்த மாணவர்களுக்கு ஆட்சியர் மு.அருணா
காசோலை, பாராட்டு சான்றிதழ் மற்றும்
நினைவு ப்பரிசினை
வழங்கி வாழ்த்து தெரிவித்தார். புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் இந்த நிகழ்ச்சி நடந்தது.
இந்த நிகழ்ச்சியில மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கூ.சண்முகம், மாவட்ட கல்வி அலுவலர் கள் ரமேஷ்(புதுக்கோட்டை ), ஜெயந்தி (அறந்தாங்கி) , செந்தில் (தொடக்க கல்வி) , கலாராணி (தொடக்க கல்வி) , லீலாவதி (தனியார் பள்ளிகள்), மாவட்ட திட்டமேலாளர் (தொழில்முனைவோர்மற்றும் புத்தாக்கநிறுவனம்) ஆபிரகாம்லிங்கன்,
மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர்
(புத்தாக்கதிட்டம்) முனைவர் சாலை செந்தில் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.