Skip to content
Home » கோவை அருகே கோழியை வேட்டையாடிய சிறுத்தை… சிசிடிவி..

கோவை அருகே கோழியை வேட்டையாடிய சிறுத்தை… சிசிடிவி..

கோவை மாவட்டம் மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள தடாகம், மாங்கரை, திருவள்ளுவர் நகர், கணுவாய், சோமையனூர் பன்னிமடை, வீரபாண்டிபுதூர் உள்ளிட்ட பகுதிகளில் காட்டுயானைகள், காட்டுப்பன்றிகள், ஆகிய வன விலங்குகளின் நடமாட்டம் உள்ளது.

இந்நிலையில் சில மாதங்களாகவே சிறுத்தை மற்றும் கருஞ்சிறுத்தை நடமாட்டமும் அவ்வப்போது தென்படுகிறது. மலை மற்றும் வனத்தை ஒட்டிய பகுதிகள் என்பதால் வனவிலங்குகள் ஊருக்குள் வரும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கின்றன.

இந்நிலையில் கணுவாய் அடுத்த திருவள்ளுவர் நகரில் இன்று காலை சுமார் 6:15 மணியளவில் ஊருக்குள் வந்த சிறுத்தை ஒன்று ஒருவரது வீட்டில் வளர்த்து வந்த கூண்டில் இருந்த கோழிகளை வேட்டையாடி உள்ளது.

அந்த கூண்டில் மூன்று நான்கு கோழிகள் இருந்த நிலையில் சில கோழிகள் தப்பி பறந்துள்ளது. ஒரு கோழியை வேட்டையாடி சென்றதாக தெரிகிறது. இச்சம்பவம் அங்கிருந்த சிசிடிவி யில் பதிவான நிலையில் தற்போது அந்த காட்சிகள் வைரலாகி வருகிறது.
இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்பு இதே ஊரில் மலைத்தொடரில் சிறுத்தை ஒன்று பாறையில் அமர்ந்திருந்ததும் தடாகம்- வீரபாண்டி பகுதியில் கருஞ்சிறுத்தை நடமாடிய காட்சிகளும் வெளியாகி இருந்தது. இப்பகுதி Reserve Forest பகுதி என வனத்துறை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *