Skip to content
Home » தொடர் மழை…. பாபநாசத்தில் வாழை, பள்ளியை சூழ்ந்த மழைநீர்….விவசாயிகள் வேதனை…

தொடர் மழை…. பாபநாசத்தில் வாழை, பள்ளியை சூழ்ந்த மழைநீர்….விவசாயிகள் வேதனை…

  • by Authour

தொடர் மழையால் அய்யம் பேட்டை அருகே கோவிந்தநாட்டுச் சேரி ஊராட்சி, பட்டுக் குடியில் வாழைக் கொல்லையில் மழை நீர் தேங்கி நின்றது. பாபநாசம் தங்க முத்து மாரியம்மன் கோயில் அருகில் சாக்கடை நீர் நிரம்பி, மழை நீருடன் கலந்தது.

தொடர் மழையால் பாபநாசம், இதன் கற்று வட்டாரப் பகுதிகளிலுள்ள குளங்கள், வாய்க்கால்கள் நிரம்பின. வாய்க்கால்கள் முறையாக தூர் வாராததால் நிரம்பி வழிந்தன. மழையால் நிரம்பிய அய்யம் பேட்டை அருகே சக்கராப் பள்ளி வாய்க்கால்.தொடர் மழையால் சமீபத்தில்

போடப் பட்ட கும்பகோணம் – தஞ்சாவூர் மெயின் சாலை ஆங்காங்கே குண்டும் குழியுமாகி பல்லாங்குழி சாலை யானது.தொடர் மழையால் பாபநாசம் அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளி வளாகத்தில் மழை நீர் தேங்கி நின்றது.

தொடர் மழையால் அய்யம் பேட்டை அடுத்த கணபதி அக்ரஹாரம் கும்பகோணம் – திருவையாறு மெயின் சாலையில் சாலையோரம் இருந்த 100 ஆண்டு பழமையான மா மரம் சாலையில் சாய்ந்தது.

இதனால் கும்பகோணம் – திருவையாறு மெயின் சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து பாதித்தது கணபதி அக்ரஹாரம் கும்பகோணம் – திருவையாறு மெயின் சாலையில் சாலையோரம் இருந்த 100 ஆண்டு பழமையான மா மரம் சாய்ந்தது.

பலத்த மழை காரணமாக மெலட்டூர் அருகே கொத்தங்குடி ஊராட்சி ஜம்பு காவேரி வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டு நெற் பயிர் மழை நீரில் மூழ்கி பாதிப்பு ஏற்பட்டது.பாபநாசத்தில் பெய்ந்து வரும் தொடர் மழையால் கும்பகோணம் – தஞ்சாவூர் மெயின் சாலையோரம், தனியார் வங்கி ஏடிஎம் வாசலில் மழை நீர் வடிகாலுக்காக தோண்டப் பட்ட பள்ளத்தில் மழை நீர் தேங்கி நின்றது. பாபநாசத்தில் பெய்ந்து வரும் தொடர் மழையால் கும்பகோணம் – தஞ்சாவூர் மெயின் சாலையில் உள்ள சைக்கிள் ஸ்டாண்ட்டிற்குள் மழை நீர் புகுந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *