மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடர்ந்து மூன்றாவது நாளாக கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. விவசாய நிலங்களில் நடப்பட்ட இளம் பயிர்கள் மழை நீரில் மூழ்கியுள்ளது. பல்வே இடங்களில் சாலை ஓரங்களிலிருந்த புளியமரம் ஆலமரம் போன்றவை விழுந்துள்ளது பெரம்பூர் பகுதியில் தரங்கம்பாடி செல்லும் வழியில் சாலை ஓரத்தில் இருந்த ஆலமரம் ஓன்று வீர சோழனாற்றில் சாய்ந்து விட்டது. இதனால் ஆற்றில் செல்லும் தண்ணீர் தடைபட்டுள்ளதால் வயலில் இருந்து மழைநீர் வடிய வைப்பதில் தேக்கம் ஏற்பட்டுள்ளது.
தரங்கம்பாடி அருகே ஆனந்தமங்கலம் ஓடகரை தெருவை சேர்ந்த ரத்தினகுமார் என்பவருது 35 ஆண்டு பழமை வாய்ந்த மாடி வீடு என்று
விழுந்தது, அந்த நேரத்தில் ரத்தினகுமாரும் அவர் மனைவி மற்றும் மூன்று குழந்தைகளும் உள்பக்கத்தில் உறங்கிக் கொண்டிருந்ததால் இடுப்பாடுகளிலிருந்து அவர்கள் தப்பித்தனர் ஆனால் வாசலில் கட்டி வைத்திருந்த நான்கு ஆடுகள் இடுபாடகளில் சிக்கி பலியாகின.
மயிலாடுது அருகே வில்லியநல்லூர் கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட ஏக்கரில் சம்பா பயிர் மூழ்கியுள்ளது. சேத்தூர் வடிகால் வாய்க்கால்தூர் வராததால் மழைநீர் வடிவதில் தேக்கம் ஏற்பட்டு 45 நாட்களான நெற்பயிர் தண்ணீரில் மூழ்கியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் தற்போது மழை ஓய்ந்துள்ளது.