தேனி மாவட்டம் மதுரை- கொச்சி தேசிய நெடுஞ்சாலையான போடி மெட்டு மலைச்சாலையில் புலியூத்து அருகே நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக ராட்சத பாறை ஒன்று உருண்டு விழுந்தது. இந்த பாறை உருண்டதால் சாலையின் நடுவில் பள்ளம் ஏற்பட்டு பாறை அப்படியே ரோட்டில் குத்துக்கல் போல உட்கார்ந்து விட்டது.
நடு ரோட்டில் ராட்சத பாறை இருப்பதால் சிறிய ரக வாகனங்கள் மட்டுமே அந்த சாலையில் கடந்து செல்ல முடிகிறது. கனரக வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது .
குரங்கணி காவல்துறையினர் மற்றும் நெடுஞ்சாலை துறையினர் விரைந்து சென்று பாறையை அகற்றி போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டு உள்ளனர் இதனால்தேனி மாவட்டம் போடி மெட்டு வழியாக கேரளா செல்லும் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது