அதானி முறைகேடு விவகாரத்தை தீவிரமாக எடுத்துள்ள எதிர்க்கட்சிகள், இது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வலியுறுத்தி வருகின்றன. ஆனால் அரசு அனுமதிக்காததால் நாடாளுமன்ற வளாகத்தில் தினந்தோறும் புதுவிதமான போராட்டங்களை நடத்தி வருகின்றன. இதனால் இரு அவைகளிலும் அலுவல்கள் பாதிக்கப்பட்டன.
இந்த நிலையில், திமுக எம்.பி.க்கள் இன்றும் நாளையும் நாடாளுமன்றத்திற்கு கட்டாயம் வர வேண்டும் என்று கொறடா உத்தரவிட்டுள்ளார். ஒரே நாடு ஒரே தேர்தல் உள்பட முக்கியமான மசோதாக்கள் மீதான விவாதம் நடைபெற இருப்பதால் இந்த உத்தரவை கொறடா பிறப்பித்துள்ளார்.