Skip to content
Home » வடகிழக்கு பருவமழை…. கரூர் மாவட்டத்திற்கு தொலைபேசி எண்கள் அறிவிப்பு..

வடகிழக்கு பருவமழை…. கரூர் மாவட்டத்திற்கு தொலைபேசி எண்கள் அறிவிப்பு..

கரூர் மாவட்டத்தில் உள்ள பொது மக்களுக்கு வடகிழக்கு பருவமழை காரணமாக பாதிப்பு ஏற்பட்டால் புகார் தெரிவிக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் தொலைபேசி எண்கள், whatsapp எண்கள் வெளியிட்டுள்ளனர்.

வங்க கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டிருந்த நிலையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கன மழை மற்றும் மிதமான மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கரூர்

மாவட்டத்தில் நேற்று இரவு தொடங்கி தற்போது வரை விட்டுவிட்டு மழை பெய்து வரும் நிலையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தங்கவேல் அறிவிப்பு வெளியிட்டிருந்தார் இந்த நிலையில் கரூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் பொதுமக்கள் வடகிழக்கு பருவமழை காரணமாக பாதிப்பு ஏற்பட்டால் புகார் தெரிவிக்க தொலைபேசி எண்கள் மற்றும் வாட்ஸ் அப் என்னை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் வெளியிட்டுள்ளார்.  1800 425 4566 மற்றும் 04324-256306, வாட்ஸ்அப்.. 8220165405 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *