Skip to content
Home » நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணம்…கோலாகலம்… விஜய் பங்கேற்பு

நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணம்…கோலாகலம்… விஜய் பங்கேற்பு

  • by Authour

நடிகை கீர்த்தி சுரேஷ் திருமண பங்க்ஷன் கோவாவில் நடைபெறும் நிலையில் அதில் நடிகர் விஜய் கலந்து கொண்டிருக்கிறார். அப்போது எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அதிகமுகமாகி இப்போது பலமொழிகளில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கும் கீர்த்தி சுரேஷ் தனது 15 வருட காதலரான ஆன்டனியை இன்று திருமணம் செய்தார்.  இவர்களுடைய திருமணம் கோவாவில் நடைபெற்றது. இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

கீர்த்தி சுரேஷின் திருமணம் காலையில் ஹிந்து முறைப்படியும், மாலையில் கிறிஸ்தவ முறைப்படியும்

Television Keerthy Suresh

நடைபெறுகிறது. இந்த நிலையில் திருமண பங்க்ஷனில் ஒரு சில சினிமா பிரபலங்களும் கலந்து கொண்டனர். றனர். அதில் நடிகர் விஜய்யும் கலந்து கொண்டிருக்கிறார். விஜய் வேஷ்டி சட்டையில் கலந்து கொண்ட புகைப்படங்கள் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கீர்த்தி சுரேஷ் மற்றும் விஜய் இருவரும் பைரவா மற்றும் சர்க்கார் என்ற இரண்டு திரைப்படங்களில் ஒன்றாக நடித்திருக்கிறார்கள். அந்த திரைப்படத்திற்கு பிறகு இவர்கள் இருவருக்கும் நல்ல நட்பு ஏற்பட்டிருக்கிறது. அதோடு இவர்கள் இருவரைப் பற்றியும் சில வதந்திகளும் பரவி வந்தது. அதையெல்லாம் பொய் என்று சொல்லும் வகையில் தான் 15 வருடங்களாக ஆண்டனியை காதலித்து வரும் ரகசியத்தை சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் போட்டு உடைத்து இருந்தார். அதுபோல கீர்த்தி சுரேஷின் திருமணத்தில் விஜய் கலந்து கொண்டு தன்னை பற்றிய வதந்திகளுக்கு பதிலடி கொடுத்து இருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *