டிபன் கடை ஊழியரின் டூவீலர் திருட்டு… சிக்கிய திருடன்…
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியைச் சேர்ந்தவர் காசிநாதன் ( 48 )இவர் திருச்சி தில்லை நகர் 4 -வது கிராஸ் பகுதியில் உள்ள டிபன் கடை ஒன்றில் பணிபுரிந்து வருகிறார் .இவர் தான் பணிபுரியும் ஓட்டல் முன்பு டூவீலரை நிறுத்திவிட்டு வேலைக்கு சென்று விட்டார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது டூவீலரை காணவில்லை. உடனே அவர் தில்லை நகர் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார் . இப்புகாரின் பேரில் எஸ்ஐ வேல்முருகன் வழக்குப்பதிவு செய்து விசாரித்தார். விசாரணையில் டூவீலரை திருடியதாக கீழ ஆண்டாள் வீதியைச் சேர்ந்த யுகேந்திரன் (வயது 20) என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து டூவீலர் பறிமுதல் செய்யப்பட்டது . அவர் மீது கோட்டை, ஸ்ரீரங்கம் ஆகிய போலீஸ் ஸ்டேசன்களில் வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
மணல் கடத்தல்.. 2 பேர் கைது.. வாகனம் பறிமுதல்
ஸ்ரீரங்கம் பஞ்சக்கரை ரோடு பகுதியில் திருவரங்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தீபிகா தலைமையிலான போலீசார் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக அந்த லோடு ஆட்டோவை வழிமறித்து சோதனை செய்தனர். அதில் உரிய ஆவணங்களின்றி மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து அந்த வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக திருவளர்ச்சோலையைச் சேர்ந்த விஜய பாரதி , விஜயபாஸ்கர் ஆகிய 2 பேரை கைது செய்தனர். ரமணா என்பவரை தேடி வருகின்றனர்.
லாட்டரி விற்ற 6 பேர் கைது… பணம் பறிமுதல்..
திருச்சி, காந்தி மார்க்கெட், பாலக்கரை பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இவையடுத்து காந்தி மார்க்கெட், பாலக்கரை போலீஸ் சரக்கத்திற்கு உட்பட்ட போலீசார் அந்தந்த பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் லாட்டரி விற்ற 6 பேர் சிக்கினர். அவர்களிடமிருந்து பணம் மற்றும் லாட்டரி சீட்டுகள் விற்றதற்கான ஆவணங்களும் பறிமுதல் செய்தனர்.