திருச்சி தென்னூர் அண்டகொண்டான் பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மகன் விஜய் என்கிற கோழி விஜய் (25 ). இவர் அப்பகுதியைச் சேர்ந்த துரை என்பவரை ஒரு வழக்கு தொடர்பாக போலீசுக்கு தகவல் தெரிவித்து, காட்டிக் கொடுத்ததாக அதே பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் விஜய்க்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தென்னூர் அண்ட கொண்டான் பகுதியில் விஜய் என்கிற கோழி விஜய் நின்று கொண்டிருந்தபோது அப்பகுதி இளைஞர்கள் தென்னூரை சேர்ந்த தினேஷ்குமார், ஜீவா நகரை சேர்ந்த ஹரிச்சக்கரவர்த்தி, வாமடத்தைச் சேர்ந்த மணிகண்டன் ஆகிய மூன்று பேர் அங்கு வந்துள்ளனர். அப்போது அவர்களுக்கும் விஜய்க்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது .இதில் அந்த 3 வாலிபர்களும் விஜய்யை அரிவாளால் வெட்டினர் . இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. காயமடைந்த விஜய் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் தில்லை நகர் போலீஸ் எஸ்ஐ திவ்யபிரியா வழக்குப்பதிந்து தினேஷ் குமார், ஹரிச்சக்கரவர்த்தி, மணிகண்டன் ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை செய்து வருகிறார். காயமடைந்த விஜய் என்கிற கோழி விஜய் ரவுடி பட்டியலில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.