நானும் எனது மனைவி ஜி.எஸ். தர்ஷனாவும் எங்கள் 17 வருட திருமண வாழ்வில் இருந்து விடைபெறுகிறோம்” என்று திரைப்பட இயக்குநர் சீனு ராமசாமி தெரிவித்துள்ளார்.
சமீபமாக திரையுலக பிரபலங்கள் மத்தியில் விவகாரத்து என்பது அதிகமாகி வருகிறது. தற்போது சீனு ராமசாமியும் விவகாரத்து செய்ய முடிவு செய்திருக்கிறார். இது தொடர்பாக தனது எக்ஸ் தள பதிவில், “நானும் எனது மனைவி ஜி.எஸ்.தர்ஷனாவும் எங்கள் 17 வருட திருமண வாழ்வில் இருந்து விடைபெறுகிறோம். இருவரும் விருப்ப விவாகரத்து பெற்று அவர் அவருக்கு உண்டான திசையில் பயணிக்கவும் அந்த பாதையில் தர்ஷனாவின் செயல்பாடுகள் என்னையும் எனது செயல்பாடுகள் அவரையும் எவ்விதத்திலும் சேராது, பொறுப்பாகாது என்பதை நான் அறிவேன்; அவரும் அறிவார்.இப்பிரிவுக்கு உதவும் படி சென்னை உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளோம். இருவரின் தனிப்பட்ட இந்த முடிவுக்கு மதிப்பளிக்கும் தங்களின் வாழ்த்துக்கள் எங்களுக்கு ஊக்கம்” என்று சீனு ராமசாமி தெரிவித்துள்ளார். ‘கோழிப்பண்ணை செல்லத்துரை’ வெளியானது. அப்படம் எதிர்பார்த்த வரவேற்பினை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது