நேரு யுவ கேந்திரா சார்பில் மாபெரும் இளையோர் கலைத் திருவிழா புதுக்கோட்டை கைக்குறிச்சி ஸ்ரீ பாரதி மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் நடந்தது. நேரு யுவ கேந்திரா மாவட்ட ஆலோசனைக் குழு உறுப்பினர் சரவணகுமார், மாமன்னர் கல்லூரி பேராசிரியர் கணேசன்,ஸ்ரீ பாரதி மகளிர் கலை அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் செ கவிதா, இயக்குனர் முனைவர் மா குமுதா மற்றும் சேது கார்த்திகேயன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர்.
பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு நேரு யுவகேந்திரா சார்பில் ரொக்கப் பரிசுகளும் பாராட்டு சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். பரிசு வழங்கும் நிகழ்ச்சிக்கு ஸ்ரீ பாரதி மகளிர் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் தனசேகரன் தலைமை தாங்கினார். நேரு யுவகேந்திரா மாவட்ட இளையோர் அலுவலர் ஜோயல் பிரபாகர், மாவட்ட குழந்தைகள் நலக் குழும தலைவர் சதாசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ் செம்மல் கவிஞர் தங்கமூர்த்தி , மாவட்ட விளையாட்டு மற்றும் இளையோர் அலுவலர் செந்தில்குமார் ஆகியோர் பரிசுகளை வழங்கி பாராட்டினர். இளையோர் செஞ்சிலுவைச்சங்க மாவட்ட அமைப்பாளர் பேராசிரியர் தயாநிதி வாழ்த்துரை வழங்கினார். முன்னதாக அனைவரையும் நேரு யுவ கேந்திராவின் திட்ட உதவி அலுவலர் நமச்சிவாயம் வரவேற்றார். நிறைவாக பேராசிரியர் அன்பரசி நன்றி கூறினார்.