நடிகர் ரஜினிகாந்திற்கு இன்று பிறந்த நாள். ரஜினிக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக, கோவை மாவட்டத்தில் உள்ள ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் பலரும், அவரவர் பகுதிகளில் ரஜினிகாந்த்க்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து சுவரொட்டிகளை ஒட்டி உள்ளனர். ஒவ்வொரு சுவரொட்டியிலும் வெவ்வேறு ரஜினி படம் இடம்பெற்று இருந்தாலும், அனைத்திலுமே குடும்ப தலைவருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் என்ற வாசகமே இடம்பெற்று உள்ளன. சமீபத்தில் அரசியல் கட்சி தொடங்கிய நடிகர் விஜய், 2026 ஆம் சட்டமன்ற தேர்தலில் ஆட்சியைப் பிடிப்பது குறித்து
சுவரொட்டிகள் கோவை மாநகரில் ஒட்டப்பட்டு இருந்தன. பல ஆண்டுகளாக ரஜினிகாந்த அரசியலுக்கு வருவார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், இந்த ஆண்டின் பிறந்த நாள் சுவரொட்டியில், குடும்ப தலைவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் என்ற வாசகத்தின் மூலம், ரஜினிகாந்த் அரசியலுக்கு முழுக்கு போட்டுவிட்டார் என்பதையே வெளிப்படுத்துவதாக கூறப்படுகிறது.