கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்த வெள்ளமலை டாப் டிவிசன் பகுதியில் அரசு பேருந்து இயங்கி வருகிறது அப்பகுதியில் உள்ள சாலைகள் கருங்கற்களால் பதிக்கப்பட்டு இருப்பதால் பேருந்தில் செல்பவர்கள் தாலாட்டு சீராட்டி கொண்டு செல்லும் அபாயகரமான பயணத்தில் பொதுமக்கள் பயணிக்கின்றார்கள்.
மேலும் ஊசிமலை மட்டம் ஊசிமலை டாப் டிவிஷன் வெள்ளமலை பகுதியில் உள்ள சாலைகள் சிதலமடைந்து இருப்பதால் அப்பகுதியில் சுமார் 1500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் கர்ப்பிணிகள் நோயாளிகள் வந்து செல்லக்கூடிய இந்த சாலையானது சீர் செய்ய முடியாமல் அங்குள்ள பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.
இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் சாலையை சீர் செய்ய வேண்டும் என பலமுறை
வால்பாறை நகராட்சிக்கு மனு அளிக்கப்படும் இதுவரைக்கும் அப்பகுதியில் சாலைகள் போடப்படாத நிலையில் உள்ளது இதனால் அப்பகுதியில் அவசரத் தேவையான 108 வாகனம் இதர தேவைக்கான வாகனங்கள் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர் இப்பகுதியில் இரண்டு பேருந்துகள் சுழற்சி முறையில் பயணிக்கின்றது. இருப்பினும் வாகனங்கள் பழுதடைந்து அடிக்கடி அப்பகுதிக்கு பேருந்து இல்லாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்
இதனால் பள்ளி மாணவ மாணவிகள் பள்ளி முடிந்து வீடு செல்வதற்கு இரவு 7 மணி ஆகிறது மேலும் பகுதியில் வனவிலங்கு தொல்லை அதிகமாக இருப்பதால் எந்நேரமும் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலங்குகளால் ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது உடனடியாக இதனை கருத்தில் கொண்டு அப்பகுதியில் உள்ள சாலையை சீர் செய்து புதிய தார்சாலை அமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.