புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே உள்ள பெரிய செங்கீரை என்ற கிராமத்தை சேர்ந்தவர் ராஜசேகரன், இவரது மனைவி அபிராமி. நிறைமாத கர்ப்பிணி. இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதும் மருத்துவமனைக்கு அழைத்து செல்லாமல், வீட்டிலேயே யூ-டியூப் பார்த்து மாமியாரும், கணவரும் சேர்ந்து பிரசவம் பார்த்தனர். பிரசவித்த சிறிது நேரத்தில் பச்சிளம் குழந்தை உயிரிழந்துள்ளது. அது பெண் குழந்தை.
அலோபதி மருத்துவம் மீது நம்பிக்கையில்லாமல் வீட்டிலேயே குடும்பத்தினர் பிரசவம் பார்த்ததாக தகவல் வௌியாகியுள்ளது.
அபிராமிக்கு முதல் பிரசவத்தின் போது குழந்தை இறந்ததால் அலோபதி மருத்துவம் மீது அவர்கள் நம்பிக்கை இழந்து விட்டதால், ஆஸ்பத்திரிக்கு செல்லாமல் வீட்டிலேயே பிரசவம் பார்த்து உள்ளனர். யூ-டியூப் பார்த்து மாமியாரும் கணவரும் சேர்ந்து பெண்ணுக்கு பிரசவம் பார்த்ததால் குழந்தை இறந்துள்ளது தாய்க்கும் உடல் நலம் பாதிக்கப்பட்டது. உடனடியாக அவரை தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் சிகிச்சை அளிக்க மறுத்ததால் அறந்தாங்கி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த 2வது கர்ப்பத்தை சுகாதாரத் துறையினரிடம் கூட தெரிவிக்காமல் மறைத்ததாக தகவல் வௌியாகியுள்ளது. இது தொடர்பாக காவல்துறையில் புகாரும் அளிக்கப்பட்டுள்ளது. த